திமுக அரசு முல்லைப் பெரியாறு அணையின் உரிமையைப் பாதுகாக்க தவறி விட்டது...ஓபிஎஸ்

முல்லைப் பெரியாறு அணையின் உரிமையைப் பாதுகாத்தது அதிமுக அரசு ஆனால் இன்றைய திமுக அரசு அணையின் உரிமையைப் பாதுகாக்க தவறி விட்டது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

திமுக அரசு முல்லைப் பெரியாறு அணையின் உரிமையைப் பாதுகாக்க தவறி விட்டது...ஓபிஎஸ்

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில்   கேரள அமைச்சர்கள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அணையில் 142 அடி எட்டு முன்பாகவே 138 அடி தண்ணீர் இருப்பு இருந்த நிலையில்  கேரளாவிற்கு உபரியாக தண்ணீர் திறந்துவிட்டு ஐந்து மாவட்ட விவசாயிகளின் ஜீவாதாரமான முல்லைப் பெரியாறு அணை உரிமையை நாம் இழுந்து வரும் நிலையில்,

தமிழகத்தின் எதிர்க்கட்சியான அதிமுக வரும் 9ஆம் தேதி ஐந்து மாவட்ட தலைநகரங்களிலும் கேரளா அரசையும் தமிழக ஆளும் திமுக அரசின் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.    

இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் தேனியில் அதிமுக கட்சி நிர்வாகிகள் இடையே தனியார் கூட்டரங்கில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கூறுகையில்,  

மறைந்த ஜெ ஜெயலலிதா பல சட்ட போராட்டங்களை முன்னிறுத்தி முல்லைப் பெரியாரின் உரிமையை நிலைநாட்டினார். ஆனால் தற்போது ஆளும் திமுக அரசு முல்லைப் பெரியாறு அணையின் உரிமையை காக்க தவறிவிட்டது என்றார்.  .

இனிவரும் காலங்களில் முல்லைப் பெரியாறு அணையின்  தமிழக உரிமையை நிலைநிறுத்துவதற்காக அதிமுகவின் இந்த போராட்டங்கள் மூலம் நம் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என கூறினார்.