பொதுமக்களின் அலைச்சலை குறைக்க தமிழக அரசின் இந்த ஐடியா...

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

பொதுமக்களின் அலைச்சலை குறைக்க தமிழக அரசின் இந்த ஐடியா...

தமிழ்நாட்டில் இதுவரை 2 கோடியே 37 லட்சம் பேருக்கு ஒரு டோஸ் கொரோனா கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளன. 56 லட்சத்து 47 ஆயிரத்து 769 பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. தினசரி சராசரியாக 2 லட்சம் முதல் 3 லட்சம் பேர் வரை தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் 400 முகாம்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதை செயல்படுத்தும் வகையில், இன்று மாநகராட்சியின் சார்பில் ஒரு வார்டிற்கு 2 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் என மொத்தம் 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் 200 சிறப்பு முகாம்கள் அந்தந்த வார்டில் உள்ள மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள் போன்ற ஏதேனும் ஒரு இடத்தில் நடத்தப்படுகின்றன.  இந்த வாய்ப்பை, பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.