48 விரைவு ரயில்களின் நேரத்தில் மாற்றம்- தெற்கு ரெயில்வே

தெற்கு ரயில்வேயில் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ள மேலும் 48 ரயில்களின் பட்டியல் இணையத்தில் வெளியிடபட்டுள்ளது.

48 விரைவு ரயில்களின் நேரத்தில் மாற்றம்- தெற்கு ரெயில்வே

தெற்கு ரயில்வேயில் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ள மேலும் 48 ரயில்களின் பட்டியல் இணையத்தில் வெளியிடபட்டுள்ளது.

தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் ரயில்களில் முதல் கட்டமாக 132 விரைவு ரயில்களின் நேரமும், 2-வது கட்டமாக 40ரயில்களின் நேரமும் மாற்றப்பட்டன. இந்நிலையில் 3-வது கட்டமாக 48 ரயில்களின் இயக்க நேரம் மாற்றியமைக்கப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், நிஜாமுதீன் - கன்னியாகுமரி , நாகர்கோவில் - சாலிமார் , ஹவுரா - கன்னியாகுமரி , மும்பை - நாகர்கோவில் , திருநெல்வேலி - காந்திதாம் , ஜெய்பூர் - கோவை , மதுரை - எழும்பூர் , சென்னை சென்ட்ரல் - திருப்பதி , புதுச்சேரி - சென்னை எழும்பூர்  உட்பட 48 விரைவு ரயில்களின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இவற்றில் பெரும்பாலான ரயில்களின் நேர மாற்றம் 4-ம் தேதி முதலும், சில ரயில்களின்
 நேர மாற்றம் 6, 7, 8-ம் தேதி முதலும்அமலாகும். நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ள ஒட்டுமொத்த விபரங்களும் ரயில்வேஇணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.