திமுக ஆட்சிக்கு ஸ்பீட் பிரேக் போட தான் இந்த உள்ளாட்சித் தேர்தல்... ஓ.பன்னீர்செல்வம் பேச்சு...

நடைபெற்றுக் கொண்டிருக்கிற திமுக ஆட்சிக்கு ஸ்பீட் பிரேக் போட்டு, முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய தேர்தல்தான் இந்த உள்ளாட்சித் தேர்தல் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

திமுக ஆட்சிக்கு ஸ்பீட் பிரேக் போட தான் இந்த உள்ளாட்சித் தேர்தல்... ஓ.பன்னீர்செல்வம் பேச்சு...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 மாவட்டஊராட்சி கவுன்சிலர்கள், 98 ஒன்றிய கவுன்சிலர்களுக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரத்தில் நேற்று நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகள் குறித்து பேசினார். கூட்டத்தில் பேசிய ஓ பன்னீர்செல்வம், 

தேர்தலில் திமுக சொன்ன வாக்குறுதிகளை காப்பாற்றவில்லை அண்டப்புளுகு ஸ்டாலின் என்றால் ஆகாசப் புளுகு உதயநிதி ஸ்டாலின், செய்ய முடியாததை சொன்னார்கள். மக்களை நம்ப வைத்தார்கள் மக்கள் ஓட்டு போட்டார்கள். ஒரு பொய்யையும் நிறைவேற்ற முடியவில்லை ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து  என்றார்கள், ஆகவில்லை.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது காலையில் பேப்பரை திறந்து பார்த்தால் கொலை கொள்ளை செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. பட்டப்பகலில் ரயில் நிலையத்தில் இளம்பெண் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடக்கிறாள், நான்கரை மாத காலமாக ரவுடிகளை வைத்துக் கொண்டு வேடிக்கை பார்க்கப்பட்டிருந்தது, 

இப்போது அறிக்கை வெளியிட்ட பின் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு உள்ளது என்றும், நடைபெற்றுக் கொண்டிருக்கிற திமுக ஆட்சிக்கு ஸ்பீட் பிரேக் போட்டு, முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய தேர்தல்தான் இந்த உள்ளாட்சித் தேர்தல்,

ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாம் பெறுகின்ற வெற்றி, நடைபெற இருக்கின்ற எந்த தேர்தலாக இருந்தாலும்  பேரூராட்சி, நகராட்சி மாநகராட்சி  தேர்தலுக்கு இந்த வெற்றி அச்சாரமாக அமைய வேண்டும் என கட்சி நிர்வாகிகளை கேட்டுக் கொண்டார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், கோகுல இந்திரா, பெஞ்சமின், 
வி.சோமசுந்தரம் மற்றும் கட்சி நிர்வாகிகளும் வேட்பாளர்களும் கலந்துகொண்டனர்.