திருவாரூர்: கனமழை... 30 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் சாய்ந்து சேதம்!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நிலத்தில் சாய்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திருவாரூர்: கனமழை... 30 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் சாய்ந்து சேதம்!!

திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி,நன்னிலம், கூத்தாநல்லூர், கோட்டூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கனமழை பெய்தது. இதன் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த 30 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா மற்றும் தாளடி பயிர்கள் சாய்ந்துள்ளன. 

இதே போல் நாகபட்டினம் மாவட்டம் தெத்தி, வடகுடி, பட்டமங்களம், ஆவரானி, மீனம்பல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. அவற்றை அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடந்து வரும் சூழலில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்கதிர்கள் நிலத்தில் சாய்ந்தன.