ஹோலி பண்டிகை கொண்டாடவே செல்கின்றனர்....!!!

ஹோலி பண்டிகை கொண்டாடவே செல்கின்றனர்....!!!

வெளி மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்பட்டது போன்று போலியாக சித்தரிக்கப்பட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் கசியவிட்ட நபரை பீகார் மாநில காவல்துறை கைது செய்துள்ளது.

தமிழ்நாட்டில் ஆய்வு:

வெளிமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக அண்மையில் பரவிய வதந்தி தமிழ்நாட்டில் பூதாகரமானது.  இதுதொடர்பாக பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் குழு தமிழ்நாட்டில் ஆய்வு செய்து வருகிறது.  இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் தமிழ்நாட்டில் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், தங்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை எனவும் வடமாநில தொழிலாளர்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். 

மகிழ்ச்சியாகவே:

இந்நிலையில் தமிழகம் வருகை தந்த பீகார் அரசு அதிகாரிகள் குழுவினர், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.  அப்போது, வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மேற் கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.  பின்னர் பேசிய பீகார் உள்ளாட்சித் துறை செயலர் பாலமுருகன்,வடமாநில தொழிலாளர்களிடம் தங்கள் குழு பேசியதாகவும் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியதாகவும் தெரிவித்தார்.  

ஹோலி கொண்டாட:

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர் மீது தாக்குதல் நடத்துவது போன்று வெளியான வீடியோ தவறானது என திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் தெரிவித்துள்ளார்.  ஹோலி பண்டிகையை கொண்டாடவே அவர்கள் தங்கள் மாநிலத்திற்கு பயணம் செய்வதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

இதையும் படிக்க:     ”எனக்கு ஓட்டுப்போட்டு கிழிச்சுட்டீங்க.. கேட்க வந்துட்டீங்க...” ஆவேசமாக பேசிய அமைச்சர் பொன்முடி!!!