“மாணவர்களிடம் இருந்து ஒரே ஒரு கோரிக்கை தான்.....” இளங்கோவன்!!

“மாணவர்களிடம் இருந்து ஒரே ஒரு கோரிக்கை தான்.....” இளங்கோவன்!!

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சட்டத்துறை சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு ஒன்றியமும் மாநிலங்களும் என்ற தலைப்பின் இறுதி போட்டியில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின்,மா சுப்பிரமணியன்,சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன்,திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி, இளங்கோவன் எம்.பி கலந்து கொண்டனர். பேச்சுப்போட்டி,கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசு வழங்கி சிறப்பித்தார்

அப்போது பேசிய சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் முதலமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது எனவும் ஆனால் இது முற்றிலும் வேறானது எனக் கூறிய அவர் சட்டதுறையில் பேச்சு போட்டி,கட்டுரை போட்டி நடத்தப்படுகிறது எனத் தெரிவித்தார்.

மேலும் "தூரிகையில் தளபதி" என்ற தலைப்பில் சைதாப்பேட்டையில் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது எனக் கூறிய அமைச்சர் வயது வாரியாக ஓவியங்கள் வரையும் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாக கருதி நடத்தப்படுவதால்,சிறு குழந்தைகள் கூட பங்கேற்று முதலமைச்சரின் முகத்தை பார்க்காமல் வரைகிறார்கள் எனக் கூறினார். தொடர்ந்து பேசிய அமைச்சர் இன்று முதலமைச்சர் முக ஸ்டாலின் குழந்தைகள் முதல் கிழவன் வரை அனைவரது மனதிலும்  வாழ்ந்து வருகிறார் எனக் கூறினார்.

அவரை தொடர்ந்து பேசிய திமுக எம். பி இளங்கோவன், சட்டதுறை கட்சியின் தூண் என எங்களை உற்சாகப்படுத்தியவர் முக ஸ்டாலின் தான் எனவும் பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களிடம் இருந்து ஒரே ஒரு கோரிக்கை தான் வந்தது எனக் கூறிய அவர் அது என்னவென்றால் உதயநிதி கையில் வெற்றி கோப்பை இல்லாவிட்டாலும் சான்றிதழ் வாங்கினாலே போதும் என்று கேட்டுகொண்டனர் என தெரிவித்த எம்.பி மேலும் உதயநிதி இளைஞர்களை தன்வசம் வைத்துள்ளார் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிக்க:  “ஆனால் எதிரிகள் அவர் பின்னாலேயே இருந்திருக்கிறார்கள்...” உதயநிதி ஸ்டாலின்!!