தான் படித்த பள்ளிக்கே ஆய்வு வந்த அதிகாரி... பள்ளி பருவத்தை நினைவு கூறிய நெகிழ்ச்சி சம்பவம்!!

திருத்துறைப்பூண்டி அருகே, தான் படித்த  பள்ளிக்கே ஆய்வு அதிகாரியாக வந்த ஆசிரியர், பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்ட நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றது. 

தான் படித்த பள்ளிக்கே ஆய்வு வந்த அதிகாரி... பள்ளி பருவத்தை நினைவு கூறிய நெகிழ்ச்சி சம்பவம்!!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் சுரேஷ். இவர், 
அரசின், "சாலா சித்தி" என்ற திட்டத்தின் கீழ் பள்ளிகளின் உள்கட்டமைப்பு, கற்றல் கட்டமைப்பு உள்ளிட்டவைகளை பள்ளிகள் தோறும் ஆய்வு செய்யும் குழுவில் அதிகாரியாக உள்ளார்.

இந்நிலையில், திருத்துறைப்பூண்டி அகரமானைக்காலில் உள்ள தேசிய  தொடக்கப்பள்ளிக்கு ஆய்வுக்கு சென்றுள்ளார். அப்போது, அவர், தான்,1988-ம் ஆண்டு, இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படித்ததை நினைவு கூர்ந்து, தனது பள்ளிப் பருவ நினைவுகளை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் பகிர்ந்து கொண்டார்.

தான் படித்த பள்ளிக்கே, ஆய்வு அதிகாரியாக வந்திருப்பது, மகிழ்ச்சி அளிப்பதாக கூறி, நெகிழ்ச்சி அடைந்தார். அவருக்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்து, கவுரவித்தனர்.

சுரேஷ், தான் படித்த பள்ளிக்கு மின் விசிறி போன்றவற்றை வழங்கினார். அத்துடன் மாணவர்ளுக்கு இனிப்புகளையும் வழங்கி மகிழ்ந்தார். ஆய்வு அதிகாரி சுரேஷை பின்பற்றி அனைத்து மாணவர்களும் நன்கு படிக்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.