வாட்டி வதைத்த வெயில்...! குளிர்வித்த மழை...!!

வாட்டி வதைத்த வெயில்...! குளிர்வித்த மழை...!!

சென்னையில் இதுநாள்வரை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் ஊட்டியை போல் குளிர்ந்த சூழலை  மழை உண்டாக்கியுள்ளது.

சென்னையில் ஏப்ரல் மாதம் முழுவதுமே வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் காணப்பட்டது. இந்த நிலையில் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தில் உள்ள கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் சூழல்  நிலவுவதால் தமிழ்நாட்டின் ஒரு சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இத்தகைய சூழலில் சென்னையில் இன்று காலை முதலே கரு மேகங்கள் சூழ்ந்து பல்வேறு பகுதிகளிலும் லேசான மழை பெய்தது. குறிப்பாக திருவல்லிக்கேணி, அடையாறு, பட்டினப்பாக்கம், மெரினா கடற்கரை, தேனாம்பேட்டை, பெசன்ட் நகர், அண்ணா சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் லேசான மழை பெய்தது. இதனால் குளிர்ந்த சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிக்க:12 மணி நேர வேலை சட்டமசோதா...! திரும்ப பெற்றதாக முதலமைச்சர் அறிவிப்பு...!!