வீடுகளுக்குள் புகுந்த ஏரி தண்ணீர்... செய்வதறியாமல் தவிக்கும் குடிசைவாசிகள்...

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே ஏரி தண்ணீர் வீட்டிற்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதிகுள்ளாகியுள்ளனர்.

வீடுகளுக்குள் புகுந்த ஏரி தண்ணீர்... செய்வதறியாமல் தவிக்கும் குடிசைவாசிகள்...

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கீழ்குவளைவேடு கிராமம் இந்திராநகர் ஏரி பகுதி அருகே 40 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல ஆண்டுகளாக குடிசை வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த மக்கள் தொகுப்பு வீடு கட்டித்தர வேண்டும் என்று பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில்  தற்போது பெய்த தொடர் மழை காரணமாக கீழ்குவளைவேடு கிராமத்தில் உள்ள ஏரி நிரம்பியது. இந்த நிலையில் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியே வந்து அப்பகுதியில் இருந்த பத்திற்கும் மேற்பட்ட குடிசை வீடுகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் வீட்டிற்குள் புகுந்ததால் வீட்டில் குடியிருந்த மக்கள் குழந்தை குட்டிகளுடன் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் பெண்களும் குழந்தைகளும் வீட்டிற்குள் வந்த தண்ணீரை பாத்திரத்தின் மூலம் அப்புறப் படுத்தி வருகின்றனர். 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பொது மக்களிடம் கேட்டபோது மேடான பகுதியில் புதிய தொகுப்பு வீடு கட்டித்தர வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவே புதிய தொகுப்பு வீடு கட்டித்தர வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.