போலீசாரின் காலில் விழுந்து கதறிய நபர்...  கடனுக்காக சொத்தை அபகரித்ததாக புகார்... 

ஈரோட்டில் 40 லட்சம் ரூபாய் கடனுக்காக 8 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை அபகரித்துக் கொண்டதாக, குழந்தைகளுடன் போலீசாரின் காலில் விழுந்து கதறிய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசாரின் காலில் விழுந்து கதறிய நபர்...  கடனுக்காக சொத்தை அபகரித்ததாக புகார்... 

ஈரோடு மாவட்டம் புதூரை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார்.  அவர், ஈரோடு மூலபாளையத்தில் ராஜலட்சுமி பைனாஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் பழனிச்சாமி - மைதிலி தம்பதியிடம் 40 லட்சம் ரூபாய் கடனாக பெற்று, மாதம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வட்டி செலுத்தி வந்துள்ளார். 

கடந்த சில ஆண்டுகளாக வட்டி செலுத்தாததால் ஈஸ்வரமூர்த்தியின் 8 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை அபகரித்து கொண்டதாக, ஈஸ்வரமூர்த்தி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.  

இந்த நிலையில், மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஈரோடு காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த ஈஸ்வரமூர்த்தி, போலீசாரின் காலில் விழுந்து கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.