காதல் திருமணம் செய்த மகள்...வலுக்கட்டாயமாக இழுத்து சென்ற பெற்றோர்...வலைவீசி தேடும் போலீசார்!

காதல் திருமணம் செய்த மகள்...வலுக்கட்டாயமாக இழுத்து சென்ற பெற்றோர்...வலைவீசி தேடும் போலீசார்!

நெல்லை கூடங்குளம் அருகே காதல் திருமணம் செய்த பெண்ணை இழுத்து சென்ற புகாரில், தந்தை உட்பட 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள ஸ்ரீ ரங்க நாராயணபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவர் அதே தெருவை சேர்ந்த சுமிதா  என்ற பெண்ணை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து உள்ளார். தொடர்ந்து, பெண்ணை காணவில்லை என கூடங்குளம் காவல் நிலையத்தில் பெண்ணின் தாயார் பத்மா புகார் கொடுக்கவே, வழக்கு பதிவு செய்த கூடங்குளம் போலீசார் சுமிதாவை தேடி வந்தனர். அதனை தொடர்ந்து சுமிதாவின் குடும்பத்தார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர்.

இதையும் படிக்க : ஆபத்தை உணராமல் படிக்கட்டில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்...!

இந்நிலையில், நீதிமன்றத்தில் ஆஜரான சுமிதாவை மேஜர் என்பதால் கணவரோடு செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் பெற்றோர் உறவினர்களுடன் சேர்ந்து கணவன் வீட்டிலிருந்த சுமிதாவை வலுகட்டாயமாக இழுத்து சென்றுள்ளனர். இது சம்பந்தமாக கூடங்குளம் போலீசார் சுமிதாவின் தந்தை முருகேசன் உட்பட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

தென்காசியில் கிருத்திகா சம்பவம் நடந்து முடிவதற்குள் கூடங்குளத்தில் இதேபோன்று ஒரு சம்பவம் அரங்கேறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.