முதியோர் உதவித் தொகை யார் ஆட்சியில் அதிகம்...திமுக-அதிமுக இடையே காரசார விவாதம்!

முதியோர் உதவித் தொகை யார் ஆட்சியில் அதிகம்...திமுக-அதிமுக இடையே காரசார விவாதம்!

முதியோர் உதவித்தொகை யாருடைய ஆட்சிக்காலத்தில் அதிகம் வழங்கப்பட்டது என்பது குறித்து அதிமுக திமுகவினரிடையே பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. 

சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் அதிமுக உறுப்பினர் காமராஜ் பேசுகையில், திமுக ஆட்சிக்காலத்தில் 500 ரூபாயாக இருந்த, முதியோர் உதவித் தொகையை ஆயிரம் ரூபாயாக உயர்த்தியது அதி.மு.க. தான் என வாதிட்டார். 

இதையும் படிக்க : அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை...கலக்கத்தில் இல்லத்தரசிகள்!

இதற்கு பதிலளித்த வருவாய்த் துறை அமைச்சர் கே. கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், வெறும் 35 ரூபாயாக இருந்த முதியோர் உதவித்தொகையை 500 ரூபாயாக உயர்த்தி அறிவித்தவர் கருணாநிதி என்று வாதிட்டார். 

தொடர்ந்து அதிமுக உறுப்பினர் காமராஜ், உங்கள் ஆட்சிக்காலத்தில் ஏழரை லட்சம் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

பதிலளித்து பேசிய அமைச்சர் KKSSR ராமச்சந்திரன், அதிமுக ஆட்சிக்காலத்தில் 2015 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் 15 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டது என்றும்,  இரட்டைப் பதிவு, இறந்தவர்களின் விவரங்கள் மட்டும் முதியோர் உதவித்தொகை பட்டியலில் இருந்து நீக்கியுள்ளோம். தகுதி வாய்ந்த அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இப்படியாக, தொடர்ந்து இருவருக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.