முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது தனியார் மருத்துவமனை நிர்வாகம்..!

முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து  அறிக்கை வெளியிட்டுள்ளது தனியார் மருத்துவமனை நிர்வாகம்..!

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றால் பாதித்ததையடுத்து, நேற்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் முதல்வர் உடல்நிலை குறித்து இன்று மீண்டும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

வெளிமாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்க்கொண்ட முதல்வர் ஸ்டாலின்:

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு மற்றும் கட்சி சார்ந்த பணிகளுக்காக, வெளி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார்.

மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா உறுதி:

இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவருக்கு, சில தினங்களுக்கு முன்பு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்ட அவர், தனது ட்விட்டர் பக்கத்தில் ”எனக்கு இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் #COVID19 உறுதிசெய்யப்பட்டதையடுத்து என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இதனால் அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு, பாதுகாப்புடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

தனியார் மருத்துவமனை வெளியிட்ட முதல் அறிக்கை:

இந்த நிலையில், மருத்துவப் பரிசோதனைக்காக சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தது. இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனையைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை இன்று வெளியிட்ட  அறிக்கை:

மாண்புமிகு தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் நேற்று கோவிட் தொற்று தொடர்பான சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கோவிட் சிகிச்சை நெறிமுறையின்படி தேவையான சிகிச்சைகள் முடிக்கப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் தற்போது முதல்வர் நலம் பெற்று நலமாக உள்ளார். மேலும், சில நாட்கள் ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தனியார் மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.