மாணவியை ஆசிரியை மதமாற்றம் செய்ய முயற்சித்த விவகாரம்.. ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்காமல் காப்பற்ற நினைப்பதாக புகார்!!

திருப்பூரில் மாணவியை மதமாற்றம் செய்ய முயன்ற ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் அவரை காப்பாற்ற முயல்வதாக இந்து இளைஞர் முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவியை ஆசிரியை மதமாற்றம் செய்ய முயற்சித்த விவகாரம்..  ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்காமல் காப்பற்ற நினைப்பதாக புகார்!!

திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ஜெய்வாபாய் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு பயிலும் மாணவியை ஆசிரியை மதமாற்றம் செய்ய முயற்சித்ததாக சர்ச்சை எழுந்தது.

கடந்த 19ம் தேதி இதுகுறித்து புகாரளித்த மாணவியின் பெற்றோர், பள்ளியில் உள்ள 2 ஆசிரியைகள் இந்து கடவுளை விமர்சிப்பதாகவும், வேறு மதத்திற்கு மாற தொடர்ந்து வற்புறுத்துவதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து மாணவி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலானது.

இதையடுத்து ஆசிரியையின் இத்தகைய மதமாற்ற செயலுக்கு கண்டனம் தெரிவித்து இந்து முன்னணியினர் பள்ளி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த பின்னர் கலைந்து சென்றனர். இருப்பினும் இதுவரை ஆசிரியை மீது எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், ஆசிரியை காப்பாற்ற அதிகாரிகள் முயல்வதாகவும் குற்றம்சாட்டி இன்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகர் முன்பு தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். இதில் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டு ஆசிரியை செயலுக்கு எதிராக பதாகைகள் ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.