வெயில் தமிழ்நாட்டில் கொளுத்த போகுது...! - ஆராய்ச்சியாளர்கள் தகவல்....

வெயில் தமிழ்நாட்டில் கொளுத்த போகுது...! - ஆராய்ச்சியாளர்கள் தகவல்....

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது... பல மாவட்டங்களில் தற்போதே 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெயில் பதிவாகியுள்ளது... ஈரோடு, திருப்பத்தூர் நகரங்களில் அதிகபட்சமாக 104 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது. சுட்டெரிக்கும் இந்த வெயிலால், நாள்தோறும் பணிக்கு செல்வோர், கட்டுமானத் தொழிலாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளனர்.

மேலும் படிக்க | அட இப்படியுமா நடக்கும்!!!அடித்து விளையாடியதில் சுயநினைவை இழந்த மாணவர்

பகல் நேரத்தில் வெப்பநிலை இயல்பை விட மூன்று முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்துள்ள சூழலில், அடுத்து வரும் நாட்களிலும் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார். வறண்ட வானிலை, தரைக்காற்று போன்றவையே இந்த வெப்பநிலை அதிகரிப்பதற்கான காரணங்கள் என்கிறார் தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் ஶ்ரீகாந்த்.

குறிப்பாக, சென்னையின் புறநகர் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், தாம்பரம் போன்ற பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கக்கூடும் என்றும், வெப்ப அலைகள் வீசுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் ஸ்ரீகாந்த் கூறுகிறார்.வெயிலின் பாதிப்பில் இருந்து தப்பிக்க, காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, வெயிலை முடிந்த வரையில் தவிர்த்து நிழலில் இருப்பதே அனைவருக்கும் நல்லது என்றும், அதனை தவிர்க்கும்பட்சத்தில் பல்வேறு உடல் உபாதைகளை சந்திக்க வேண்டிய சூழலும் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.