வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவு...!

வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவு...!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தாக்கல் செய்த வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா காலமானதை அடுத்து அந்த தொகுதியில் இம்மாதம் 27-ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அதிகப் படியான பணப் பட்டுவாடாவை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் ரொக்கப் பணம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க : புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்காக...தலைமுடியை தானமாக கொடுத்த கல்லூரி மாணவிகள்!

இதில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தேமுதிக சார்பில் ஆனந்த் ஆகியோர் களத்தில் உள்ளனர். கடந்த ஜனவரி 31-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், கடந்த 7-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. வேட்பு மனுக்களை திரும்பப் பெற இன்று இறுதி நாள் என்பதால் இன்று மாலை வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது. 

இந்நிலையில், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் தீவிர களப் பணியில் ஈடுபட்டுள்ளன. சாதனைகள் மற்றும் மாற்று கட்சிகளின் குறைகளை சுட்டிக்காட்டி வீடு வீடாகச் சென்று பொது மக்களிடம் வாக்கு சேகரிக்கும் பணியில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.