தன்னை விடுவிக்க கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

தன்னை விடுவிக்க கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.

தன்னை விடுவிக்க கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

கடந்த 2018ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேரையும் விடுதலை செய்வதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருந்ததால், தன்னை விடுவிக்க கோரி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இவ்வழக்கு நீதிபதிகள் நாகேஷ்வரராவ், கவ்யா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இவ்வழக்கு கடந்த புதன் கிழமை விசாரணைக்கு வந்த போது, மாநில அமைச்சரவையின் முடிவை ஏற்காமல் ஆளுநர் செயல்படுவது கூட்டாட்சி தத்துவதற்கு எதிரானது என குறிப்பிட்ட நீதிபதிகள், இவ்வழக்கில் மாநில அரசு உத்தரவை பிறப்பிக்கவில்லை என்றால் நாங்கள் பிறப்பிப்போம் என நீதிபதிகள் கூறியிருந்தனர்.

இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.