பாறை மீது விழுந்த காட்டெருமை பலி

வனப்பகுதியில் உணவு மற்றும் தண்ணீரை தேடி சுற்றித்திரிந்த காட்டெருமை பாறை மீது விழுந்து உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாறை மீது விழுந்த காட்டெருமை பலி

வனப்பகுதியில் உணவு மற்றும் தண்ணீரை தேடி சுற்றித்திரிந்த காட்டெருமை பாறை மீது விழுந்து உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்த வன விலங்குகள் அவ்வபோது விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் கும்மனூர் என்ற வனப்பகுதியில் 6 வயது மதிக்கத்தக்க காட்டெருமை ஒன்று உணவு மற்றும் தண்ணீரை தேடி அலைந்துள்ளது. அப்போது அந்த காட்டெருமை பாறை மீது விழுந்து வெளியே வர முடியாமல் அங்கேயே இறந்து விட்டது. இதனை அடுத்து ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வனத்துறை ஊழியர்கள் காட்டெருமை இறந்து கிடப்பதைப் பார்த்து உடனடியாக உயரதிகாரிகளுக்கும் மருத்துவர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி அங்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் மருத்துவர்கள் இறந்து கிடந்த காட்டெருமையின் உடலை பிரேத பரிசோதனை செய்து அங்கேயே அடக்கம் செய்து விட்டனர்.