கள்ளக்குறிச்சி மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதம் வெளியானது!!

தான் சரியாக படிப்பதில்லை என ஆசிரியர்கள் துன்புறுத்தியதாக கள்ளக்குறிச்சி மாணவி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதம் வெளியானது!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள கனியாவூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்ற மாணவி கடந்த 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

மாணவியின் தாய் தனது மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறியதை அடுத்து,  அம்மாணவியின் உறவினர்கள் ஊர்காரர்கள் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர் மாணவி படித்த தனியார் பள்ளிக்கு சென்று சாலைமறியலில் ஈடுபட்டனர்.

பள்ளி வாகனங்களை சேதப்படுத்தி, நெருப்பு வைத்து கொளுத்தினர். இதனால் அங்கு காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே பெரிய வன்முறை வெடித்தது. முதலமைச்சரில் இருந்து டிஜிபி வரை பொதுமக்களை அமைதி காக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

விடுதியில் தங்கி பயின்று வந்த மாணவி, ஆசிரியர்கள் திட்டுவதாக இறப்பதற்கு முன்பு எழுதி வைத்திருந்த கடிதம் ஏற்கனவே கைப்பற்றப்பட்டது. இந்நிலையில், அந்த கடிதம் வெளியாகியுள்ளது.

அதில், நான் நன்றாக தான் படிப்பேன்.. எனக்கு கெமிஸ்ட்ரியில் வரும் Equation படிக்கச் கடினமாக இருக்கு எனவும்.. இதனால், தன்னை கெமிஸ்ட்ரி ஆசிரியர் பிரஷர் போடுவதாகவும் மாணவி கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் தான் நன்றாக படிப்பதில்லை என கணக்கு ஆசிரியரிடமும் கூறியுள்ளார் கெமிஸ்ட்ரி ஆசிரியர். இதனால் அவரும் தனக்கு பெரும் அழுத்தம் தருகிறார் என வேதனையுடன் அக்கடிதத்தில் மாணவி குறிப்பிட்டுள்ளார். இவங்க ரெண்டு பேருல யாரோ ஒருத்தர் நான் நன்றாக படிப்பதில்லை என அனைத்து ஆசிரியரிடமும் கூறியுள்ளனர்.

அவர்களை.. தன்னை என்ன ஒழுங்கா படிக்கமாற்றியேமே.. விளையாட்டு தனமாக இருப்பதாக கூறியது, மிகுந்த வேதனை அளித்தப்பாக மாணவி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கணக்கு ஆசிரியர் என்னை மட்டும் துன்புறுத்தவில்லை இங்கு இருக்கும் அனைவரும் துன்புறுத்துவதாகவும்.. தன்னால் இந்த துன்புறுத்தலை தாங்க முடியவில்லை என மன வேதனையில் எழுதியது பார்ப்போரை கண்கலங்க செய்துள்ளது.

மேலும் தனக்கு செலுத்திய ஹாஸ்டல் பீஸ், ஸ்கூல் பீஸ், புக் பீஸ் என அனைத்தையும் என் அம்மாவிடம் கொடுத்துடுங்க என குறிப்பிட்ட மாணவி.. கடைசியாக சாரி அம்மா, சாரி அப்பா என கூறி கடிதத்தை முடித்து தன் வாழ்க்கையையும் முடித்துள்ளார் மாணவி.