வருகிற 11-ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டம் கனவாக தான் இருக்கும் - கோவை செல்வராஜ் விமர்சனம்!

சென்னையில் வருகிற 11-ம் தேதி அன்று நடைபெறவிருக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டமானது வெறும் கனவாக இருக்கும் என ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் விமர்சித்துள்ளார்.

வருகிற  11-ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டம் கனவாக தான் இருக்கும் - கோவை செல்வராஜ் விமர்சனம்!

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அவர் ஆதரவாளரான  கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து இல்லாமல் பொதுக்குழுவை நடத்த முடியாது எனவும், நீதி மன்றம் கூறிய பிறகும் பொதுக்குழுவை முறையாக நடத்தாமல் தீர்மானங்களை நிராகரித்துள்ளனர் என்றார்.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகிவிட்டது என்றால் அவைத் தலைவரை எவ்வாறு ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் தேர்வு செய்ய முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது சர்வாதிகார போக்கில் அதிமுக கட்சியை கம்பனி போல் நடத்த முயற்சி செய்கின்றனர் எனவும்,  இன்னும் ஒரு மாதத்தில் நாங்கள் கட்சியை வழி நடத்துவோம் எனவும் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.