கை சின்னத்திற்கு வாக்குசேகரிப்பு...திமுகவின் வெற்றி...நாடாளுமன்ற தோ்தலுக்கு அச்சாரமாக அமையும்...!

கை சின்னத்திற்கு வாக்குசேகரிப்பு...திமுகவின் வெற்றி...நாடாளுமன்ற தோ்தலுக்கு அச்சாரமாக அமையும்...!

ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி நாடாளுமன்ற தேர்தலுக்கு அச்சாரமாக இருக்கும் என அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் தொிவித்துள்ளாா்.

ஈரோடு இடைத்தேர்தல் :

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறவுள்ளதால் தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் தங்களது நிலைப்பாட்டை அறிவித்து வந்த நிலையில், கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

திமுக அரசுக்கு சவால் :

இத்தேர்தல் ஆளும் திமுக அரசுக்கு ஒரு மிகப்பெரிய சவால் என்றே சொல்லலாம். ஏனென்றால், கடந்த 2021ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 20 மாதங்கள் ஆன நிலையில் அவர்களின் ஆட்சி சிறந்த முறையில் நடந்துள்ளதா என்பது இந்த தேர்தல் மூலம் தெரியவரும் என்பதால், திமுக ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கு திமுக மும்மரம் காட்டி வருகிறது.

காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனுத்தாக்கல் :

அதன்படி, இடைத்தேர்தலுக்கான வியூகத்தை வகுத்த திமுக, ஏற்கனவே, ஈரோடு தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றதால் இந்த முறையும் தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ் - கே ஒதுக்கியது. பின்னர் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து வேட்புமனுதாக்கலுக்கு வருகின்ற 7 ஆம் தேதி இறுதி நாள் என்பதால், நேற்று காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே. எஸ் இளங்கோவன்  வேட்புமனுதாக்கல் செய்தார்.

இதையும் படிக்க : அதிமுகவிற்கு சின்னம் இருக்கிறதா...? இடைத்தேர்தலில் தெரியும் யாருக்கு அதிக ஓட்டுன்னு...!

அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் வாக்கு சேகரிப்பு :

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதாித்து கால்நடைத்துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் தீவிர வாக்குசேகாிப்பில் ஈடுபட்டாா். 
வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கு முன்பாகவே, திமுகவினர் காங்கிரஸ் வேட்பாளருக்காக தீவிரபிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில், நேற்று ஜானகி அம்மா வீதியில் உள்ள  பள்ளி வாசலில் தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியா்களிடம் காங்கிரஸ் வேட்பாளரருக்காக அனிதா ராதாகிருஷ்ணன் வாக்கு சேகாித்தாா். 

நாடாளுமன்ற தேர்தலுக்கு அச்சாரம்:

இதைத்தொடா்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவா், ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி திமுக அரசின் சாதனைகளை கூறும் வெற்றியாக இருக்கும் எனவும், இந்த வெற்றி நாடாளுமன்ற தேர்தலுக்கு அச்சாரமாகவும் இருக்கும் எனவும் கூறினார்.