ஈரோடு இடைத்தோ்தலில் பணப்பட்டுவாடா நடப்பதாக அமமுக வேட்பாளா் சிவா பிரசாந்த் குற்றம்சாட்டியுள்ளாா்.
இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் :
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறவுள்ளதால் தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் தங்களது நிலைப்பாட்டை அறிவித்து வந்த நிலையில், கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது.
அதன்படி, வேட்புமனுத்தாக்கல் தொடங்கி நான்காவது நாளான நேற்று (03.01.2023) காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன், அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த் ஆகியோர் வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.
அதிமுகவிற்கு சின்னம் இருக்கிறதா?:
இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்த அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அமமுகவிற்கு என்று தனியாக கொடி, சின்னம், தலைவர் இருப்பதாகக் குறிப்பிட்டு, அதிமுகவிற்கு சின்னம் இருக்கிறதா? என கேள்வி எழுப்பினார். மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் எங்கள் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்த்திருப்பதாக தெரிவித்த வேட்பாளர் சிவபிரசாந்த், ஈரோடு இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்திற்கு அதிக ஓட்டுகள் விழுகிறதா அல்லது சுயேட்சை சின்னத்தில் நிற்கும் அதிமுகவினருக்கு அதிக ஓட்டுகள் விழுகிறதா என பொறுத்திருந்து பாருங்கள் என்று தெரிவித்தார்,
பணப்பட்டுவாடா நடப்பதாக குற்றச்சாட்டு :
தொடர்ந்து பேசிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதியில் பணப்பட்டுவாடா நடப்பதாக குற்றம்சாட்டிய அவா், இதுகுறித்து தோ்தல் ஆணையத்திடம் புகாா் அளிக்க உள்ளதாகவும் தொிவித்துள்ளாா்.