தமிழ்நாட்டில் அதிரடியாக நடந்த பணியிடமாற்றம்...தலைமைச் செயலர் கடிதத்தில் இருந்தது என்ன?

தமிழ்நாட்டில் அதிரடியாக நடந்த பணியிடமாற்றம்...தலைமைச் செயலர் கடிதத்தில் இருந்தது என்ன?
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டில் 3 ஐஏஎஸ் மற்றும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் :

தமிழ்நாட்டில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ராணிப்பேட்டை ஆட்சியராக இருந்த பாஸ்கர பாண்டியன் திருப்பத்தூருக்கும், அங்கு ஆட்சியராக இருந்த அமர் குஷ்வாஹா, சமூக பாதுகாப்புத்துறை இயக்குநராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதேபோல் சமூக பாதுகாப்புத்துறை இயக்குநராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி வளர்மதி ராணிப்பேட்டை ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா். 

ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் :

அதேபோல் சென்னை பெருநகர காவல் துறை சைபர் க்ரைம் பிரிவு துணை ஆணையர் கிரண் சுருதி, ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், அங்கு காவல் கண்காணிப்பாளராக இருந்த தீபா சத்யன் சென்னையில் உள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சக்தி கணேசன் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

கொளத்தூர் காவல் மாவட்டம் துணை ஆணையர் ராஜராம், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், கட்டாய காத்திருப்புப் பட்டியலில் உள்ள காவல் கண்காணிப்பாளா் ரவளி பிரியா, தமிழ்நாடு சீரூடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கும் நியமிக்கப்பட்டுள்ளனா். இவ்வாறு மொத்தம் 3 ஐஏஎஸ் மற்றும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com