குறுக்கு வழியில் வெற்றி பெற துடிக்கும் தி.மு.க – மாஜி அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு…  

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்: தேர்தல் பொறுத்தவரை நியாயமாக, நேர்மையான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் கூறினோம் என்றார்.

குறுக்கு வழியில் வெற்றி பெற துடிக்கும் தி.மு.க – மாஜி அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு…   

ஒவ்வொரு வாக்கு சாவடியிலும் வெப் கேமரா பொறுத்த வேண்டி, பூத் ஸ்லிப் கொடுக்க வேண்டும் என கூறி இருந்தோம்.  ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. திமுக வின் ஜனநாயக விரோத செயலை ஏற்றுக்கொண்டு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. எப்படியாவது குறுக்கு வழியில் வெற்றி பெற வேண்டும் என திமுக செயல்பட்டு வருகிறது என ஜெயக்குமார் குற்றச்சாட்டினார்.

மேலும் மாநில தேர்தல் ஆணையம் உயர் நீதி மன்றத்தில் உறுதி கொடுத்தது. ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை. வாக்கு சாவடிகள் குறைவாக உள்ள நிலையில் கேமரா பொறுத்துவத்தில் என்ன பிரச்சனை. திமுக பொறுத்தவரை ஏமாற்று பேர்வழிகள் என மக்கள் உணர்ந்துள்ளார்கள். தேர்தல் நடைபெற்று வரும் சூழலில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட கூடாது. ஆனால் கோவிளம்பாக்கம் பகுதியில்  திமுக நிர்வாகி ஒருவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் என ஜெயக்குமார் குற்றச்சாட்டினார். சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை நிறைவேற்ற முடியாத வாக்குகளை கொடுத்து திமுக வெற்றி பெற்றுள்ளது. நீட் தேர்வால் மாணவர்கள் இறந்தார்கள் அதற்கு திமுக தான் காரணம். அதனால் தான் அவர்கள் தற்போது மக்களை சந்திக்கவில்லை.

நேர்மையான முறையில் இந்த தேர்தல் நடந்தால் அதிமுக வெற்றி பெறும். ஆனால் முறைகேடாக நடைபெற்று வருகிறது.  தேர்தலை பொறுத்தவரை ஜனநாயக ரீதியில் நடந்தால் அதிமுக வெற்றி பெறும். வாக்காளர் விரோத போக்கு நடத்தி வெற்றி பெறலாம் என திமுக நினைத்தால் அது போலியான வெற்றி எனவும் கூறினார்.