இந்து பண்டிகைகள் வரும்போது மட்டும் திமுக அரசு ஊரடங்கு போடுகிறது...காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டு.!

மோடியின் பஞ்சாப் பயணம் ரத்து செய்யப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தமிழக முதல்வர் இதுவரை கண்டனம் தெரிவிக்காதது ஏன் ? என பாஜக கலை கலாசார பிரிவு மாநில தலைவர் காயத்திரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்து பண்டிகைகள் வரும்போது மட்டும் திமுக அரசு ஊரடங்கு போடுகிறது...காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டு.!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாஜக சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.  இதில் பாஜக கலை கலாசார பிரிவு மாநில தலைவர் காயத்திரி ரகுராம் கலந்துகொண்டு பொங்கல் விழாவை துவக்கி வைத்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூறுகையில்,

இந்து பண்டிகைகள் வரும்போது மட்டும் திமுக ஊரடங்கு போடுகிறது. அவர்கள் எப்போதும் இந்துகளுக்கு எதிராக தான் செயல்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.  

எதிர்க்கட்சியாக இருக்கும்போது பொங்கல் பரிசாக 5,000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்தார்கள் ஆனால் தற்போது மக்களை ஏமாற்றி விட்டார்கள். மக்கள் தற்போதைய அரசு மீது மிகுந்த அதிருப்தியில் உள்ளார்கள் என குற்றம் சாட்டினார்.

மேலும் கொரானா பரவலை காரணம் காட்டி  கோயில்களை வெள்ளி சனி ஞாயிறு கிழமைகளில் மூடியிருக்கிறார்கள், ஆனால் டாஸ்மாக் கடைகளை ஏன் திறந்து வைத்திருக்கிறார்கள்  என்று கேள்வி எழுப்பினார்.