சிங்கப்பூர் சென்றடைந்த முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு!

சிங்கப்பூர் சென்றடைந்த முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு!

சிங்கப்பூர் சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிங்கப்பூருக்கான இந்திய தூதர் உற்சாக வரவேற்பு அளித்தார். 

புதிய தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கவும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9 நாட்கள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்றுள்ளார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உற்சாகமாக வழியனுப்பினர்.

இதைத் தொடர்ந்து தனி விமானம் மூலம், சிங்கப்பூர் விமான நிலையம் சென்றடைந்த  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிங்கப்பூருக்கான இந்திய தூதர் பெரியசாமி மலர் கொத்துக் கொடுத்து வரவேற்றார்.  முதலமைச்சருடன், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் மருமகன் சபரீசன் உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.

சிங்கப்பூரில் அந்நாட்டு தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ஈஸ்வரன், உள்துறை அமைச்சர் சண்முகம் மற்றும் அந்நாட்டின் முன்னணி தொழில் நிறுவனங்களான டெமாசெக், செம்கார்ப் அதிபர்கள் ஆகியோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். அத்துடன், முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று, புரிந்துணர் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார். மேலும் சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்துள்ள கலை நிகழ்ச்சிகளிலும் முதலமைச்சர் பங்கேற்க உள்ளார். 

இதையும் படிக்க: மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் மாற்றம்!: