டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர்...குடியரசு தலைவரை சந்திக்க உள்ளதாக தகவல்!

டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர்...குடியரசு தலைவரை சந்திக்க உள்ளதாக தகவல்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் புறப்பட்டு சென்றார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லவிருந்த ஏர் இந்தியா விமானத்தின் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து விமானம் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் நேற்றைய பயணத்தை ரத்து செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு திரும்பினார். 

இதையும் படிக்க : ஆட்சியில் அள்ளித்தரப் போகும் ஆஃபர்கள்...! கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி....! மகிழ்ச்சியில் மீனவர்கள்..!

இதனையடுத்து, இன்று காலை விமானநிலையம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி சென்ற பின் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசுவார் என கூறப்படுகிறது. இதற்கிடையே ஜூன் 3-ம் தேதி கருணாநிதி பிறந்த தின நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தொடங்குகிறது.

அன்றைய தினம் சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட பல்நோக்கு மருத்துவமனை திறக்கப்பட உள்ளது. அதுபோல மதுரையில் பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ள நூலகமும் திறக்கப்பட உள்ளது. இந்த மருத்துவமனைக்கும், நூலகத்துக்கும் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவற்றை திறந்து வைப்பதற்கு குடியரசுத் தலைவரை முதலமைச்சர் நேரில் அழைப்பு விடுப்பார் என கூறப்படுகிறது.