ஆட்சியில் அள்ளித்தரப் போகும் ஆஃபர்கள்...! கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி....! மகிழ்ச்சியில் மீனவர்கள்..!

ஆட்சியில் அள்ளித்தரப் போகும்   ஆஃபர்கள்...!   கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி....!  மகிழ்ச்சியில் மீனவர்கள்..!

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த பிறகு மீனவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் காப்பீடு, பெண் மீனவர்களுக்கு வட்டி இல்லா ஒரு லட்சம் ரூபாய் கடன், ஒவ்வொரு மீனவருக்கும் தினம்தோறும் 25 ரூபாய் மானியத்துடன் 500 லிட்டர் டீசல் வழங்கப்படும் மீனவர்களுடன் நடந்த கலந்துரையாடலில் ராகுல் காந்தி அறிவிப்பு.

கர்நாடக மாநிலத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக இரண்டாம் கட்ட பிரச்சாரத்தில் ராகுல் காந்தி ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், இன்று  உடுப்பி நகரில் இன்று மீனவர்களுடன் ராகுல் காந்தி நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய அவர்,  காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு மீனவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் 10 லட்சம் ரூபாய் உயிர் காப்பீடு வழங்கப்படும் என்றும், பெண் மீனவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்றும் ஒவ்வொரு மீனவருக்கும் தினம்தோறும் 500 லிட்டர் டீசல் 25 ரூபாய் மானியத்துடன் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். 

அறிவிப்பு வெளியிட்ட பிறகு மீனவர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடிய போது பெண் மீனவர் ஒருவர் கடலில் ஏற்படும் விபத்துகளில் இருந்து மீனவர்களை காப்பாற்ற கடல் ஆம்புலன்ஸ் உருவாக்கப்படுமா என்று கேள்வி எழுப்பிய நிலையில் அவரிடம் பல தகவல்களை கேட்டு அறிந்த ராகுல் காந்தி காங்கிரஸ் ஆட்சி அமைத்த பிறகு நிச்சயம் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை வழங்கினார். 

அதன் பிறகு பல்வேறு மீனவர்களிடம் ராகுல் காந்தி கலந்துரையாடிய போது மீனவர்களுக்கு என தனி அமைச்சரவை உருவாக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு என்றும் நடப்பு காலத்தில் முதலாளித்துவம் பெருகிய காரணத்தினால் சிறு மீன்பிடி மீனவர்கள் ஜிஎஸ்டி பொருட்கள் விலை ஏற்றம் டீசல் விலை ஏற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடும் இன்னலை சந்தித்து வருவதாகவும் அவர்களது வாழ்வாதாரம் சிதைந்து வரும் நிலையில் மீனவர்களின் வாரிசுகளின் கல்வி பெறுவது கேள்விக்குறியாகி உள்ளதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

தொடர்ந்து, இந்த துயரங்களை  எல்லாம் களையும்  அரசாக காங்கிரஸ் அரசு விளங்கும் என்ற உறுதியை மீனவர்கள் இடையே வழங்கினார்.  விவசாயிகள் நிலத்தில் விவசாயம் செய்து மக்களுக்கு உணவளிப்பது போல் மீனவர்கள் கடலில் விவசாயம் செய்து மக்களுக்கு உணவளித்து வருகின்றனர் இருவரையும் காப்பாற்றும் அரசாக வரும் காங்கிரஸ் அரசு திகழும் என்ற வாக்குறுதியையும் வழங்கினார். 
  
 இதையும் படிக்க     }  புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள கூட்டுறவு நூற்ப்பாலையை.... மீண்டும் திறக்ககோரி ஆலை தொழிலாளர்கள் போராட்டம்....!

மேலும், காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்கனவே 200 யூனிட் இலவசம் மின்சாரம் ஒவ்வொரு வீட்டிற்கும் வழங்கப்படும், குடும்பத் தலைவிகளுக்கு 2000 ரூபாய் ஊக்கத்தொகை, வேலையில்லா பட்டதாரிகளுக்கு 1,500 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை உதவித்தொகை, ஒவ்வொரு குடும்பத்திற்கும் விலையில்லா 10 கிலோ அரிசி வழங்கப்படும் என நான்கு முக்கிய வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மீனவர்களை கவரும் வண்ணம் மூன்று முக்கிய அம்சங்கள் கொண்ட வாக்குறுதிகளை ராகுல் காந்தி வழங்கி உள்ளார். இது மீனவ மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 இதையும் படிக்க    }  துக்ளக் குருமூர்த்திக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு - இதுதான் காரணமா ?