தமிழகம் வந்தது மத்திய குழு... ஒமிக்ரான் பரவலை கண்காணிக்கிறது...

ஒமிக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கை தமிழகம் வந்துள்ள மத்திய குழு,  ஐந்து நாட்கள் தங்கியிருந்து சுகாதாரத்துறையின் பல்வேறு பணிகளை கண்காணிக்க திட்டமிட்டுள்ளது.

தமிழகம் வந்தது மத்திய குழு... ஒமிக்ரான் பரவலை கண்காணிக்கிறது...

ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு மத்திய உயர்மட்ட குழு சென்று கண்காணிக்க திட்டமிட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த சிலருக்கு ஒமிக்ரான் தொற்று முதலில் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது மகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட 17 மாநிலங்களுக்கு பரவி உள்ளது.

தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் போதிலும் நாடு முழுவதும் ஒமிக்ரானால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.  ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த கோவிட் விதிமுறைகளை கடுமையாக்க மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், பல மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா, உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு நேரில் சென்று கண்காணிக்க மத்திய குழு திட்டமட்டது. இதன் ஒருபகுதியாக மத்திய குழு நேற்று தமிழகம் வந்தது. அந்த குழுவில் மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத்துறை வல்லுநர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். தமிழகத்தில் 5 நாட்கள் தங்கியிருந்து கொரோனா தடுப்பு மற்றும் தடுப்பூசி பணிகளை துரிதப்படுத்த தேவையான ஆலோசனைகளை மத்திய குழு வழங்க உள்ளது.