வில்லியனூர் தூய லூர்து அன்னை  திருத்தலத்தின் 146-வது ஆண்டு திருவிழா....  கொடியேற்றத்துடன் துவங்கியது...!

வில்லியனூர் தூய லூர்து அன்னை  திருத்தலத்தின் 146-வது ஆண்டு திருவிழா....  கொடியேற்றத்துடன் துவங்கியது...!


புதுச்சேரி வில்லியனூர் தூய லூர்து அன்னை  திருத்தலத்தின் 146-வது ஆண்டு திருவிழா  கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

புதுச்சேரி வில்லியனூரில் அமைந்திருக்கும் மிகவும் பிரசித்திபெற்ற  தூய லூர்தன்னை திருத்தலத்தின் ஆண்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகை முடிந்த 6-ம் நாளில் கொடியேற்றத்துடன் துவங்குவது வழக்கம். 

அதன்படி வில்லியனூர் தூய லூர்தன்னை திருத்தலத்தின் 146-வது ஆண்டுப் பெருவிழா இன்று காலை கொடியேற்றதுடன் தொடங்கியது.

இதையும் படிக்க | மெல்ல அழியும் நாட்டுப்புற கலைகள்... காக்க வரும் இணைய தளம்!!

முன்னதாக  அருள்நிறை ஆலயத்தில் வில்லியனூர் மாதா திருத்தல பங்குத் தந்தை பிச்சைமுத்து  தலைமையில் நடைபெற்ற கூட்டு திருப்பலிக்கு பின்னர்,  திருக்கொடியானது  பக்தர்கள் புடைசூழ மாதா குளத்தை சுற்றி பவனியாக கொண்டு வரப்பட்டது. 

பின்னர் கொடிக்கு சிறப்பு திருப்பலிகள் நடத்தப்பட்டு பின்னர்,  திருத்தல முற்றத்தில் உள்ள கொடிமரத்தில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் கொடியேற்றி விழாவை துவக்கி வைத்தார். தொடர்ந்து  தினமும் காலை மற்றும் மாலையில் திருப்பலிகள், தேர்பவனி நடைபெறுகிறது.

 இதையும் படிக்க | 45 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை...இன்று அதிரடி குறைவு...!