தஞ்சை : " அடிப்படை வசதிகளுக்காக தமிழக அரசிடம், நிதி கோரியுள்ளோம்..." - மேயர் தகவல்

தமிழகத்திலேயே முதன் முறையாக தஞ்சை மாநகர மக்களுக்கு 24 மணிநேரமும் குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - தஞ்சை மாநகராட்சி மேயர் தகவல்..!

தஞ்சை : " அடிப்படை வசதிகளுக்காக தமிழக அரசிடம், நிதி கோரியுள்ளோம்..." - மேயர் தகவல்

தஞ்சை மாநகராட்சியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மேயர் சண்.ராமநாதன், தஞ்சை மக்களுக்கு 24 மணிநேரமும் குடிநீர் வழங்கிட, கொள்ளிடம் ஆற்றில் கூட்டு குடிநீர் திட்டத்தில் கூடுதலாக ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் பணிகள் நிறைவடைய உள்ளது. அதனால், மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திடும் வகையில் 24 மணிநேரமும் குடிநீர் விரைவில் வழங்கப்பட உள்ளதாக கூறினார்.

மேலும் பேசிய அவர், தஞ்சையில் விபத்துக்களை தவிர்க்கவும், குற்றங்களை கண்காணித்து தடுக்கவும் நவீன முறையிலான சிக்னல்களுடன், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். தஞ்சையில் உள்ள 51 வார்டுகளையும் ஆய்வு செய்த நிலையில், சாலைகள், மின் விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்திட  ரூ. 1,100  கோடி திட்டம் தயாரித்து  தமிழக அரசிடம் நிதி கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.