ஏழாவது நாளாக தொடரும் ஆசிரியர்களின் உண்ணாவிரதம்!

சென்னை டிபிஐ வளாகத்தில் தொடர் உண்ணாநிலை போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்களில் பலரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.  

சென்னை நுங்கம்பாக்கம்  டிபிஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் டெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள்  ஏழாவது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பகுதி நேர ஆசிரியர்கள் பத்தாவது நாளாக உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் இந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தொடர்பாக அரசு தரப்பு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. 

இதனால் சுமார்  200க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மயக்கம் அடைந்து உள்ளனர். அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. சில ஆசிரியர்களுக்கு போராட்ட கலத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

பகுதி நேர ஆசிரியர்களின் போராட்டம் இரவு பகலாக  10வது நாளாக  நீடிக்கிறது.  தேர்தல் வாக்குறுதி 181ஐ நிறைவேற்ற வேண்டும் என்றும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதையும் படிக்க: “மத்திய பாஜக அரசை கண்டித்து அக்.8-ல் நாதக. ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!