தமிழகத்தில் டாஸ்மாக் கடை படிப்படியாக மூடப்படும்: ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

டெல்லியில் பிரதமர் மோடியை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து  பேசினார். தமிழக முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றார். தனி விமானம் மூலமாக டெல்லி சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக எம்பிக்கள் சார்பில் விமான நிலையத்தில் வரவேற்பு  அளிக்கப்பட்டது.  

இதையடுத்து டெல்லியில் கட்டப்பட்டு வரும் திமுக அலுவலகத்தை பார்வையிட்டு ஆய்வு  செய்த மு..க.ஸ்டாலின்,பின்னர் தமிழ்நாடு இல்லத்திற்கு  சென்றார். அங்கு காவல்துறை சார்பில்  முதலமைச்சருக்கு அணிவகுப்பு  மரியாதை அளிக்கப்பட்டது.  

இந்த  நிலையில்  தமிழ்நாடு இல்லத்தில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரின் இல்லத்திற்கு  சென்று மோடியை சந்தித்து பேசினார். தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிரதமருடன் ஆலோசனை  நடத்தினார். மேலும் தமிழகத்திற்கு நிதி கோருவது  நீட் தேர்வை ரத்து செய்வது உள்ளிட்ட  பிரச்சனைகள் குறித்து மனு பிரதமரிடம் மனு  அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற குழு தலைவர்  டி.ஆர்.பாலு தலைமை செயலர் இறையன்பு மற்றும் முதலமைச்சரின் தனி செயலர்கள் உடனிருந்தனர். 

இதனிடையே பிரதமர் மோடியை சந்தித்த பின் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், தமிழகத்தில் மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும் என உறுதி அளித்தார்.