12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்...தமிழ்நாடு அரசு உத்தரவு!

12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்...தமிழ்நாடு அரசு உத்தரவு!

பீலா ராஜேஷ், ரமேஷ் சந்த் மீனா உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நில நிர்வாக ஆணையராக இருந்த டாக்டர் பீலா ராஜேஷ், மின்சாரம் மற்றும் எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மின்சாரத் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த ரமேஷ் சந்த் மீனா சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பட்டு வளர்ச்சித் துறை இயக்குநராக இருந்த டாக்டர் விஜயா ராணி கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராகவும் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் நிர்வாக இயக்குநராக இருந்த ஆசியா மரியம் சிறுபான்மையினர் நலத் துறை இயக்குநராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஊரக வளர்ச்சித் துறை  இணைச் செயலாளர் சந்திரசேகர் சாகமுரி பட்டு வளர்ச்சித் துறை இயக்குநராகவும் டாக்டர் விஜயகுமார் நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனத்தின் தலைவராகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க : கர்நாடகா : இளம்பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட பாஜக நிர்வாகி அதிரடி கைது...!

நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவன தலைவராக இருந்த டாக்டர் ஸ்வர்ணா தமிழ்நாடு சிறுதொழில் நிறுவன தலைவராகவும் நீர்வளத் துறை கூடுதல்  செயலாளராக இருந்த கண்ணன் தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கால்நடைத் துறை துணைச் செயலாளராக இருந்த ரஞ்சித் சிங் நாகப்பட்டினம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட அலுவலராகவும், கோயம்புத்தூர் ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராக இருந்த அலர்மேல் மங்கை சேலம் ஊரக வளர்ச்சி முகமைக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

சிறுபான்மையினர் நலத் துறை இயக்குநராக இருந்த டாக்டர் சுரேஷ் குமார் தமிழ்நாடு கதர் மற்றும் கிராம தொழில்துறை வாரிய தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மற்றும் கூடுதல் ஆட்சியராக இருந்த வீர் பிரதாப் சிங் வணிக வரி நுண்ணரிவுப்  பிரிவு இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.