அடுத்த மாதம் வரபோறேன்...ரெடியா இருந்துக்கோங்க...தமிழக அரசு சொன்ன தகவல்...!

அடுத்த மாதம் வரபோறேன்...ரெடியா இருந்துக்கோங்க...தமிழக அரசு சொன்ன தகவல்...!

2023 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழ்நாடு அரசு தயாராக இருப்பதாக  கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஜல்லிக்கட்டு போட்டி:

தமிழகத்தின் மாபெரும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மாடுபிடி வீரர்கள் அன்றைய தினம் களத்தில் இறங்கி தங்களுடைய வீரத்தை வெளிப்படுத்துவர். என்னதான் நம் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என்றாலும், ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடைபெறும் போது மாடுபிடி வீரர்கள் ஒருவருக்காவது காயம் இல்லாமல் இருக்காது. அப்படி இருந்தும் மக்களால் மிகவும் விரும்பப்படும் விளையாட்டு என்றால் அது ஜல்லிக்கட்டு தான். 

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை:

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியானது, முதலில் பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்திலும், மறுநாள் பாலமேட்டிலும், அதற்கு அடுத்த நாள் அலங்காநல்லூரிலும்  நடத்தப்படுவது வழக்கம். இதில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்றது. இந்த ஜல்லிக்கட்டை காண்பதற்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் உற்சாகமாக வந்து கண்டுகழிப்பார்கள்.

இதையும் படிக்க: உதயநிதியின் திறமைக்கு...இது காலதாமதமே...அமைச்சர் பகீர்!

மாபெரும் போராட்டம் வெடிப்பு:

ஆனால், கடந்த 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் தடை விதித்ததால், மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. இதையடுத்து ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது. இதையடுத்து தமிழக சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டம் கடந்த 2017-ம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு அப்போதைய குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்ததால் தற்போது தடையின்றி ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது.

இந்த ஆண்டு நடைபெறுமா?:

இந்நிலையில் இந்த ஆண்டும்(2023) தடையின்றி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா? என்று எதிர்பார்த்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு இயற்றப்பட்ட அவசரச் சட்டத்தின்படி, தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் வரும் ஆண்டு கட்டாயம் நடத்தப்படும் எனவும், போட்டியை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தமிழ்நாடு அரசின் சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் மூலம் மாடுபிடி வீரர்களும், பொதுமக்களும் குஷியில் உள்ளனர்.