ஜோய்மாலா மட்டுமல்ல! எந்த யானையும் திருப்பி தர முடியாது! - அரசு மறுப்பு!!!

தொடரும் ஜோய்மாலா சர்ச்சையில், தற்போது தமிழ்நாடு அரசு தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளது.

ஜோய்மாலா மட்டுமல்ல! எந்த யானையும் திருப்பி தர முடியாது! - அரசு மறுப்பு!!!

தமிழ்நாட்டிற்கும், அசாமிறுகும் இடையே சமீபமாக பெரும் போரே நிலவி வருகிறது என்றே சொலல்லாம். கோயில் யானை ஜோய்மாலா உள்ளிட்ட குத்தகைக்கு வாங்கப்பட்ட யானைகளை அஸ்ஸாமுக்குத் திருப்பித் தர மறுத்ததால், அஸ்ஸாம் மற்றும் தமிழகம் இடையே பெரும் பிரச்சனை வெடித்துள்ளது. குத்தகைக்கு விடப்பட்ட யானைகளை திருப்பித் தர மாட்டோம் என அசாம் அரசு தாக்கல் செய்த பொதுநல மனுவுக்கு தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.

யானைகள் மீதான சித்திரவதை அறிக்கைகளைத் தொடர்ந்து அசாம் அரசாங்கம் கவுஹாத்தி உயர் நீதிமன்றத்தை நாடியது. பின், யானைகளை, குறிப்பாக தமிழ்நாட்டிற்கு அரசு குத்தகைக்கு வழங்கிய கோவில் யானை ஜோய்மாலாவை மீட்டெடுக்க வழிகாட்டுமாறு கோரிக்கை விடுத்தது.

மேலும் படிக்க | பொய்களைப் பரப்புகிறதா பீட்டா? ஜோய்மாலாவுக்கு என்ன தான் நடந்தது?

தமிழகத்தில் உள்ள ஒரு கோவிலில் ஜோய்மாலா கொடுமைப்படுத்தப்படுவதாக விலங்குகள் உரிமைக் குழுவான பீட்டா வீடியோ ஒன்றை வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த சர்ச்சை தொடங்கியது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை தமிழக அரசு நிராகரித்தது. ஜோய்மாலா சிறப்பாக செயல்படுகிறார் என்ற தமிழகத்தின் கூற்றுக்கு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஜோய்மாலாவின் பல குழப்பமான வீடியோக்கள் சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகின்றன, ஆனால் இந்த வீடியோக்கள் பழையவை. இந்த விவகாரம் தொடர்பாக வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வு அறிக்கையில் யானை தற்போது நலமுடன் இருப்பதாகவும், ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. தற்போதைய குழு ஜோய்மாலாவை நன்றாக கவனித்துக்கொள்கிறது” என்று அமைச்சகம் ட்வீட் செய்தது.

மேலும் படிக்க | மனித எல்லை பிரச்சனைக்கு பலியாக இருந்த யானை!

இதற்கிடையில், அசாம் மாநில முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் எம்.கே. யாதவா, ஜோய்மாலா சித்ரவதை செய்யப்பட்டதை தமிழ்நாடு ஒரு கடிதத்தில் ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் அவரது உடல்நிலை தற்போது நன்றாக இருப்பதாகவும் தெரிவித்தார். ஜோய்மாலா உட்பட ஒன்பது யானைகளை தமிழகத்திற்கு குத்தகைக்கு விட்டதாக அசாம் கூறுகிறது. 

மேலும் படிக்க | “அதிகாரிகளின் அலட்சியம் வருத்தமளிக்கிறது”- சமூக ஆர்வலர்கள் கவலை!!!