பேராசிரியர்கள் குழு ஆய்வுக்கு பிறகு தான் பொறியியல் கல்லூரிகளுக்கான அங்கீகாரம் நீட்டிப்பு! -அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கான அங்கீகாரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பேராசிரியர்கள் குழு ஆய்வுக்கு பிறகு தான் பொறியியல் கல்லூரிகளுக்கான அங்கீகாரம் நீட்டிப்பு! -அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் போதிய உள்கட்டமைப்பு மற்றும் போதிய அளவு ஆசிரியர்கள் இல்லாத பொறியியல் கல்லூரிகளை மூட உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் பொறியியல் கல்லூரிகளுக்கான அங்கீகாரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக அறிவித்துள்ளது.

அதன்படி மாநிலத்தில் உள்ள 500-க்கும் மேற்பட்ட பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் குழு நேரில் சென்று ஆய்வு நடத்தி அங்கீகார நீட்டிப்பை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

20 மாணவர்களுக்கு ஒரு பேராசிரியர் என்ற விகிதம் சரியாக உள்ளதா? , உள்கட்டமைப்பு போன்றவற்றை நேரில் ஆய்வு செய்து அங்கீகார நீட்டிப்பு வழங்கலாமா? வேண்டாமா? என்பதை அண்ணா பல்கலைக்கழக குழு முடிவு செய்யும் என்றும் அங்கீகார புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்க, பொறியியல் கல்லூரிகளுக்கு மார்ச் இறுதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.