ஆளுநரைநேரில் சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்... நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து விளக்கம்...

நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி வைக்கும்படி தமிழக ஆளுநரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

ஆளுநரைநேரில் சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்... நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து விளக்கம்...

சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநரை சந்தித்து பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது கனமழைக்கு அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆளுநரிடம் ஸ்டாலின் எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது. மாவட்ட வாரியாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். 

இந்தநிலையில், ஆளுநரிடம் நீட் தேர்வு விலக்கு தொடர்பாக முதல்வர் பேசியதாகவும்  அறிக்கை வாயிலாக அரசு தெரிவித்துள்ளது. அதில், மருத்துவ மாணவர் சேர்க்கையில் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் தனித்தன்மையை கருத்தில் கொண்டு ஆளுநர் விரைந்து முடிவெடுக்க அறிவுறுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.மேலும் ஏ.கே ராஜனின் குழு பரிந்துரை அடிப்படையில் தயார் செய்யப்பட்டுள்ள நீட் விலக்கு மசோதாவையும், உடனடியாக குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்திற்கு அனுப்பி வைக்க முதல்வர் வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.