முருகனின் 6 படை வீடுகளில் சிறப்பு பூஜைகள்...ஆடி கிருத்திகையையொட்டி குவிந்த பக்தர்கள்!

முருகனின் 6 படை வீடுகளில் சிறப்பு பூஜைகள்...ஆடி கிருத்திகையையொட்டி குவிந்த பக்தர்கள்!

தமிழ்க் கடவுள் முருகப்பெருமானுக்கு உகந்த நாளான ஆடி மாத கிருத்திகை திருநாளையொட்டி, சுவாமியின் 6 படை வீடுகளில் சிறப்பு பூஜைகளும் வழிபாடும் நடைபெற்றது. 

சூரபத்மனை வதம் செய்து 2-ம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆடி கிருத்திகைக்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். முன்னதாக சுவாமிக்கு பன்னீர் அபிஷேகம், பால் அபிஷேகம் நடைபெற்ற நிலையில், கடலில் புனித நீராடிய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவர் சுவாமியை தரிசனம் செய்தனர். 

அதே போல் முருகப்பெருமானின் 3-ம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனி பால தண்டாயுதபாணி கோயிலில் ஆடி கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வெளியூர் பக்தர்களின் வருகையால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது, சுவாமியைக் காண வந்த பக்தர்கள் அலகு குத்தியும், காவடி சுமந்தும் நேர்த்திக்கடனை செலுத்தினர்.  

இதையும் படிக்க : ”நாடாளுமன்ற தேர்தலில் கெட்ட பெயரை தான் வாங்கி தர போகிறீர்கள்”அதிகாரிகள் மீது குற்றம்சாட்டிய மேயர்!

தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலையில் உள்ள சுவாமிநாத திருக்கோயிலில் ஆடி கிருத்திகைக்காக சிவாமிக்கு பால், தயிர், சந்தனம் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. 4-ம் படை வீடாக விளங்கும் இக்கோயிலில், பக்தர்களின் வருகைக்காக பிற மாவட்டங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. 4ம் படை வீடான இக்கோயிலில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் காணப்பட்டதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

திருவள்ளூர் மாவட்டத்தில் சுவாமியின் 5-ம் படை வீடாக விளங்கும் திருத்தணியிலுள்ள முருகப்பெருமான் கோயிலில் ஆடிக்கிருத்திகை திருநாளையொட்டி, காலை முதலே கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு பல்வேறு அர்ச்சனைகள் நடைபெற்றது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த நிலையில். வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு காட்சியளித்த முருகப்பெருமானை காண ஆயிரக்கணக்கில் பக்தர்கள் காலை முதலே குவிந்தனர்.