ககன்யான் திட்டத்தின் மூலம் விண்கல எஞ்சின் சோதனை வெற்றி...!இஸ்ரோ அறிவிப்பு...!

ககன்யான் திட்டத்தின் மூலம் விண்கல எஞ்சின் சோதனை வெற்றி...!இஸ்ரோ அறிவிப்பு...!

திருநெல்வேலி மாவட்டம் மகேந்திர கிரியில்  ககன்யான் திட்டத்தின் மூலம் மனிதர்களை விண்ணில் நிலை நிறுத்தும் விண்கலத்தின் எஞ்சின் சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

மனிதர்களை விண்ணிற்கு அனுப்பும் இஸ்ரோவின் திட்டமான ககன்யான் திட்டம் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக மனிதர்களை விண்ணில் நிலை நிறுத்தும் விண்கலத்தின் எஞ்சின் சோதனையில் இஸ்ரோ வெற்றி பெற்றுள்ளது.

இதையும் படிக்க : ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு சூசகமாக பதிலளித்த ஆர்.என்.ரவி...மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஆளுநர்!

மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ ப்ராபல்ஷன் வளாகத்தில் 240 வினாடிகளுக்கு சோதனை நடத்தி வெற்றிகரமாக முடித்துள்ளனர். மேலும் ககன்யான்  திட்டத்தின் விண்கலம் மற்றும் எஞ்சின் கட்டுமானம், ஒருங்கிணைப்பு மற்றும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து முதலில் விகாஸ் எஞ்சினுக்கு அதி வெப்ப சோதனைகள் நடத்தப்பட்டதாகவும், இந்த சோதனையில் பயன்படுத்தப்பட்ட  தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்கள் அனைத்தும்  இந்திய தயாரிப்பு என இஸ்ரோ தெரிவித்துள்ளது.