ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு சூசகமாக பதிலளித்த ஆர்.என்.ரவி...மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஆளுநர்!

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு சூசகமாக பதிலளித்த ஆர்.என்.ரவி...மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஆளுநர்!

ஒரு தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்தால், அதனை நிராகரிப்பதாக அர்த்தம் என ஆளுநர் ஆர்.என்.ரவி  கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.


இந்தியக் குடிமைப் பணித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுடன் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவி உரையாடினார். அந்த  நிகழ்வில் பேசிய அவர், தமிழ்நாடு அமைதியான மாநிலம் எனவும், தமிழ் மொழியின் தொன்மையும் தமிழரின் கலாசாரமும் மிகுந்த மரியாதை மிக்கது எனவும் கூறினார். 

நாட்டின் 40 சதவீத காப்பர் தேவையை ஸ்டெர்லைட் பூர்த்தி செய்ததாகவும், அதனை வெளிநாட்டு நிதிகள் மூலம் மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டதாகவும் ஆர்.என்.ரவி  குற்றம் சாட்டினார்.

இதையும் படிக்க : ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை...ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு!

மேலும் ஆளுநர் ஒரு தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்தால், அதனை நிராகரிப்பதாக அர்த்தம் எனவும், அரசியலமைப்பின்படி, சட்டத்தை பாதுகாப்பதே ஆளுநரின் கடமை எனவும் அவர் தெரிவித்தார். 

ஆன்லைன்  ரம்மிக்கு தடை விதித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில்  நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க இயலாது என தற்போது ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருப்பது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.