விண்ணை தொடும் தங்கம் விலை - சவரனுக்கு ரூ.264 உயர்ந்து 40,376-க்கு விற்பனை

விண்ணை தொடும் தங்கம் விலை - சவரனுக்கு ரூ.264 உயர்ந்து 40,376-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 40 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருவது மக்களை கவலைக்குள்ளாகி உள்ளது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 264 ரூபாய் அதிகரித்து 40 ஆயிரத்து 376 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி, ஒரு கிராம் தங்கம் 5 ஆயிரத்தை கடந்து, 5 ஆயிரத்து 47-க்கு விற்பனையாகிறது. இதேபோல் வெள்ளி விலை கிலோவுக்கு 1000 அதிகரித்து 75 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை, பணவீக்கம் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.