களைகட்டும் தீபாவளி பண்டிகை... சென்னையில் இருந்து 16,000 சிறப்பு பேருந்துகள்... 

தீபாவளி பண்டிகையொட்டி சென்னையில் இருந்து 16,000 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன என்று அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்தார். மேலும் தீபாவளி பண்டிகைக்கான இனிப்பு கொள்முதல் டெண்டரில் எந்த முறைகேடும் கிடையாது என்றும், பாஜகவின் குற்றச்சாட்டு தவறானது என்றும் அவர் கூறியுள்ளார்.

களைகட்டும் தீபாவளி பண்டிகை... சென்னையில் இருந்து 16,000 சிறப்பு பேருந்துகள்... 

சென்னை மாநகர போக்குவரத்து சார்பில் குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே பல்வேறு வழித்தடங்களில் செல்ல கூடுதலாக 17 பேருந்துகள் இயக்க கொடியசைத்து போக்குவரத்து துறை அமைச்சர் ராஜாகண்ணப்பன் துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ண்ப்பன், சென்னை குரோம்பேட்டை பகுதியில் கடந்த ஆட்சியில் நிறுத்தப்பட்ட பேருந்து சேவைகளை மீண்டும் துவக்கி உள்ளோம் என்றும் இன்று 17 வழித்தடங் களுக்கு மீண்டும் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது என்றும்  தெரிவித்தார்.

அதேபோல் அடுத்த மாதம் காஞ்சிபுரத்திலும் மக்கள் தேவைக்காக நிறுத்தப்பட்ட பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அவர் கூறினார்.  

கடந்த ஆட்சியில் 14 ஆயிரம் பேருந்துகள் ஓடி கொண்டு இருந்தது தற்போது 17,790 பேருந்துகள் தற்போது ஓடி கொண்டு இருப்பதாகவும்  61புள்ளி 6 சதவீதம் பெண்கள் தற்போது இலவச பயணம் மேற்கொள்கிறார்கள் என்றும்  கூறினார் இலவச பயணத்தால் 1450 கோடி ரூபாய் இழப்பை அரசு வழங்கி வருகிறது என்றும் போக்குவரத்து துறை தொடர்ந்து மக்கள் நலனுக்காக இயக்கப்படும் என்றும் அவர் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், தீபாவளி பண்டிக்கைக்கான இனிப்பு கொள்முதலில் எந்தவித முறைகேடும் கிடையாது என்றும்  முதல்வர் உத்தரவின் பேரில் டெண்டர் ஆவினுக்கு  கொடுக்கப்பட உள்ளது எனவும், கூறிய அமைச்சர் கடந்த ஆட்சியில் 250 ரூபாய்க்கு கொடுக்கப்பட்ட டெண்டர் தற்போது 178 ரூபாய்க்கு வழங்க உள்ளது என்றும் கூறினர் மேலும்  பாஜகவின் முறைகேடு செய்வதாக கூறுவது தவறான குற்றச்சாட்டு என்றும் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.