ஜி20 மாநாட்டிற்கு சிவகங்கை மாவட்ட தூதராக மாணவா் தோ்வு...

ஜி20 மாநாட்டை முன்னிட்டு மதுரையில் நடைபெறவுள்ள மக்கள் தேவை கோாிக்கை மாநாட்டில் சிவகங்கை மாவட்ட தூதராக கல்லூாி மாணவா் தோ்வாகியுள்ளாா்.

ஜி20 மாநாட்டிற்கு சிவகங்கை மாவட்ட தூதராக மாணவா் தோ்வு...

சிவகங்கை | இந்தியாவில் இந்தாண்டு ஜி 20 மாநாடு நடக்க உள்ளது. இதன் ஒரு பகுதியாக மார்ச் 19-ம் தேதி மதுரையில் மக்கள் தேவை கோரிக்கை மாநாடு நடக்கிறது. இதில் சிவகங்கை மாவட்ட தூதராக தேவகோட்டை நகரில் வசித்து வரும் பாரதிதாசன் மகன் அறிவழகன் (17) பங்கேற்கவுள்ளார்.

பொறியியல் கல்லூரி முதலாமாண்டு மாணவரான அறிவழகன் என் பூமி என் கடமை என்ற அமைப்பின் மூலம் மரக்கன்றுகள் நடுதல், சமூக பணி செய்து வருகிறார்.இவர் செய்து வரும் சமூக பணி குறித்து ஐ.நா.வின் டிபன்ஸ் டெரிகோஸ் ஹியுமானோஸ் என்ற அமைப்பில் பதிவேற்றம் செய்துள்ளார்.

மேலும் படிக்க | இந்தியாவிற்கு வருகைப் புரிந்த விருந்தினர்கள்....

இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் லூக்காஸ் லோப்பீஸ், ஐ.நாவின் ஆசியா நாடுகளின் தலைவர் செந்தூர்பாண்டியன், இயக்குநர் தினேஷ் ஆல்வின் இப்பணிகளை ஆய்வு செய்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன் இந்த அமைப்பினர் மார்ச்-19-ல் மதுரையில் ஜி 20 மாநாட்டில் மக்கள் தேவைகள் பற்றிய கருத்தரங்கில் பங்கேற்க உள்ளதாகவும், கலந்து கொள்வோருக்கான விண்ணப்பத்தை வெளியிட்டனர்.

விண்ணப்பித்த போது வயது குறைவாக இருந்த காரணத்தால் அறிவழகனை சிவகங்கை மாவட்ட தூதராக தேர்வு செய்து அழைத்துள்ளனர். தேர்வு செய்யப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | 29 வெளிநாடுகள் 15 பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்புடன் தொடங்கியது ஜி 20 மாநாடு...