இந்தியாவிற்கு வருகைப் புரிந்த விருந்தினர்கள்....

இந்தியாவிற்கு வருகைப் புரிந்த விருந்தினர்கள்....

அசாம் மாநிலம் காசிரங்கா தேசிய பூங்காவுக்கு வருகை தந்த வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

ஜி20 அமைப்பு:

இந்தியாவுடன் ஆஸ்திரேலியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஐரோப்பிய கூட்டமைப்பு என வளரும் மற்றும் வளர்ந்த 20 நாடுகளும் கொண்ட கூட்டமைப்பாக ஜி20 அமைப்பு செயல்படுகிறது.

தலைமை பொறுப்பு:

இந்நிலையில் கடந்த நவம்பர் 16ம் தேதி, ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பு இந்தோனேசியாவிடம் இருந்து இந்தியாவுக்கு ஒப்படைக்கப்பட்டது.  தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக இந்தியா இப்பொறுப்பை டிசம்பர் 01 அன்று ஏற்றுக்கொண்டது. 

விருந்தினர்கள்:

ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு வருகை தந்த வெளிநாட்டு விருந்தினர்கள், காசிரங்கா தேசிய பூங்காவுக்கு வருகை தந்தனர்.  அவர்களுக்கு இந்தியா சார்பில் யானைகள் மூலமாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  அப்போது பூங்காவில் உள்ள வனவிலங்குகளை அவர்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர். 

இதன் தொடர்ச்சியாக கவுகாத்தியில் இன்று நடைபெறும் செயற்குழு கூட்டத்தில், காலநிலை மற்றும் பல்லுயிர் மாற்றத்தை கொண்டு வரும் வகையில் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம் என விருந்தினர்கள் மகிழச்சியுடன் தெரிவித்தனர்.  முன்னதாக, அவர்களுக்கு மேளதாளங்கள் முழங்க கலைஞர்கள் வரவேற்பு அளித்தனர். 

-நப்பசலையார்

இதையும் படிக்க:   ராணி எலிசபெத் இனி தோன்றமாட்டார்..... ஆஸ்திரேலியா திட்டவட்ட அறிவிப்பு!!!