“செந்தில் பாலாஜி மாலை சுய நினைவுக்கு திரும்புவார்”-மா.சுப்பிரமணியன்.

“செந்தில் பாலாஜி மாலை சுய நினைவுக்கு திரும்புவார்”-மா.சுப்பிரமணியன்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை முடிந்துள்ளது மாலை சுய நினைவுக்கு திரும்புவார் என அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவிதுள்ளார். 

உலக யோகா தினமான இன்று, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பில் சென்னை அண்ணா நகரில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் 350-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் யோகா பயிற்சிகளில் ஈடுபட்டனர். 

இதில் மக்கள் மற்றும் மருத்துவத்துறை  அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர் மாணவ மாணவியருடன் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் ;-

கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு வரும் 24 -ஆம் தேதி தமிழ்நாடு  முழுவதும் 100 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும் என அறிவித்தார். அந்த வகையில் சென்னையில் மொத்தம் 10 இடங்களிலும் மற்ற மாவட்டங்களில் மொத்தம் 90 இடங்களிலும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும் என்றும் காலைத் துவங்கி மாலை வரை நடைபெறும் மருத்துவ முகாமில் அனைத்து வகையான சிகிச்சைகளையும் பொதுமக்கள் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறினார்.  

மேலும், சென்னை மாநகராட்சியில் உள்ள சித்த மருத்துவத்தின் தற்காலிக பணியாளர்களை நீக்கி நிரந்தர பணியாளர்களை பணியமர்த்த  நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,  சித்த மருத்துவ பல்கலைக்கழகம் வேண்டும் என்ற அடிப்படையில் சட்டம் இயற்றப்பட்டது  எனக் குறிப்பிட்டார். அதற்கு இதுவரை ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை என்றும்,  துணைவேந்தரை நியமிக்கவும், வேந்தராக ஆளுநர் இருக்க வேண்டும் என கூறி ஒப்புதல் தராமல் உள்ளார் என கூறினார். ஆனால் மாநில பல்கலைக்கழகங்களுக்கு தானே துணை வேந்தர் நியமிக்கும் நடைமுறைகள் உள்ளது. அதனை பின்பற்ற ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் உள்ளார் என விமர்சித்தார்.

இதனையடுத்து, அமைச்சர் செந்தில் பாலஜிக்கு காலை 4 மணிக்கு அறுவை சிகிச்சைக்கான பணிகள் தொடங்கியதாகவும், தற்போது சிகிச்சை முடிந்து அதற்கான மருத்துவ கண்காணிப்பு பிரிவில் உள்ளார் என்றும் இன்று மாலை தான் அவருக்கு சுய நினைவு வரும் எனவும் தெரிவித்தார்.  எத்தனை நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவ கண்காணிப்பில்  இருக்க வேண்டும் எனவும்  மருத்துவர்கள் கூறுவார்கள் என்றார்.

இதையும் படிக்க    | மதுபிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: நாளை முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்...தமிழக அரசு அறிவிப்பு!