ராமேஸ்வரத்தில் கடல் சீற்றம்...! மீனவர்களுக்குத் தடை...!

ராமேஸ்வரத்தில்  கடல் சீற்றம்...!  மீனவர்களுக்குத் தடை...!

ராமேஸ்வரம் கடல் பகுதி சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.  

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 700 -க்கும் மேற்பட்ட விசைப்படகுகளிலும், 1500 -க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளிலும் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாட்டுபடகு மற்றும் விசைப்படகு மீனவர்கள்
இன்று (09.09.2023) தென் தமிழக கடற்கரை பகுதியில் வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகரித்து  45 முதல் 55 வரையிலும் அதிகபட்சமாக 65 கிலோ மீட்டர் வரை காற்று வீசகூடும் என்பதால் மீனவர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் மீனவர்கள் தங்களுடைய படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துக் கொள்ளவும் மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும் கடந்த 1ம் தேதியிலிருந்து 8 நாட்களாக மீன்களின் விலை வீழ்ச்சி காரணமாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் மீனவர்கள் இருந்த நிலையில் இன்று கடலுக்கு செல்ல ராமேஸ்வரம் மீனவர்கள் திட்டமிட்டு இருந்த நிலையில் கடல் சீற்றம் காரணமாக மீன்வளத்துறை அதிகாரிகள் கடலுக்கு செல்ல தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க   |  யானைகள் நடமாட்டம், "வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம்" வனத்துறையினர் எச்சரிக்கை!