எல்லையில்லாமல் போகும் மணல் கொள்ளை...விரைவில் குழிகளை மூட வேண்டும்! - அன்புமணி அறிக்கை

எல்லையில்லாமல் போகும் மணல் கொள்ளை...விரைவில் குழிகளை மூட வேண்டும்! - அன்புமணி அறிக்கை

தமிழ்நாட்டில் ஆறுகளில் உள்ள மணல் குழிகளை  மூட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ஆறுகளில் உள்ள மணல் குழிகளை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் காவிரி, கொள்ளிடம், வைப்பாறு, வெள்ளாறு உள்ளிட்ட 9 ஆறுகளில் மொத்தம் 25 மணல் குழிகள் திறக்கப்பட்டுள்ளன. 

இதையும் படிக்க : திராவிட கட்சியை வளர்த்த 3 தலைவர்களின் வரலாறு தெரியாமல் ஆளுநர் உளறுகிறார் - வைகோ குற்றச்சாட்டு!

இதில் கொள்ளிடம் ஆற்றில் மட்டும் 11 மணல் குழிகள் திறக்கப்பட்டு எல்லையில்லாத மணல் அள்ளப்படுவது சுற்றுச் சூழலுக்கும் நிலத்தடி நீருக்கும் பேராபத்தை ஏற்படுத்திவிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆற்றில் கடந்த 20 ஆண்டுகளாக கட்டுக்கடங்காமல் நடத்தப்பட்டு வரும் மணல் கொள்ளையால், அளக்குடியில் தொடங்கி 22 கி.மீ தொலைவுக்கு கடல் நீர் உட்புகுந்துள்ளதாக சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டில் திறக்கப்பட்டுள்ள மணல் குழிகளை உடனடியாக மூட தமிழ்நாடு அரசு  முன் வரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.