தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் சாமி தரிசனம் செய்ய தமிழக அரசு தடை...

சென்னை, மதுரை, திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள  முக்கிய கோவில்களில் சாமி தரிசனம் செய்ய தமிழக அரசு தடை...

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சென்னை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் மற்றும் அம்மன் திருக்கோயில்களில் ஆடி கிருத்திகை, ஆடி செவ்வாய், வெள்ளி உள்ளிட்ட முக்கிய தினங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்படுவதாக அறநிலையத்துறை உத்தரவிடப்பட்டுள்ளது. வடபழனி, கந்தக்கோட்டம் முருகன் கோவில், பாடி சிவன் கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் மதுரை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் வரும் 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோவில், கள்ளழகர் கோவில், கூடலழகர் பெருமாள் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், பழமுதிர் சோலை ஆகிய கோவில்களில் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.

இதனிடையே, திருச்சி ஸ்ரீரங்கம், மலைக்கோட்டை, திருவாணைக்காவல் உள்ளிட்ட 5 முக்கிய கோவில்களிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், திருச்சி காவிரி கரையோர பகுதிகளில் பக்தர்கள் புனித நீராடவும் மாவட்ட ஆட்சியர் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.